பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் நடிகை ஜான்வி கபூர். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இதற்காக கதை கேட்டு வந்த அவர், சூர்யாவின் ‘கர்ணா’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்நிலையில் அப்படம் கைவிடப்பட்டதால், அவர் தமிழ் திரைப்படத்தில் அறிமுகமாக இருந்த வாய்ப்பு கைநழுவியுள்ளது.