நாடாளுமன்றத்தில் 38% பெண் எம்.பி கொண்ட ஒரே கட்சி திரிணாமுல் காங்கிரஸ் தான் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தேர்தலுக்கு முன்பு பல கட்சிகள் 33% இடஒதுக்கீடு குறித்து பேசியதாகவும், ஆனால், பெண்கள் பிரதிநிதித்துவத்தை 38% தங்கள் கட்சி மட்டுமே வழங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார். இதனிடையே மழை குறுக்கிட்ட நிலையில், கொட்டும் மழையிலும் உரையாற்றினார்.