மக்களவையில் திமுக எம்பிக்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டபோது ‘உதயநிதி வாழ்க’ என்று கோஷமிட்டனர். இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ‘கொத்தடிமைகள்’ என்று ஒரு வார்த்தையில் பதிலளித்துவிட்டு சென்றார் அண்ணாமலை. இந்த வீடியோவை இணையத்தில் பாஜகவினர் பகிர்ந்து வருகின்றனர்.