நாடு முழுவதும் இந்த ஆண்டு வெப்ப அலை வாட்டி வதைத்தது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வெயிலின் தாக்கம் கொடூரமாக இருந்தது. வட மாநிலங்களிலும் இயல்பான அளவை விட மிக மிக அதிகமாக வெப்பம் வாட்டி வதைத்தது. வெயிலின் தாக்கத்தால் பலர் உயிரிழந்த சோக நிகழ்வும் நடந்தது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் ஜூலை வரையிலான காலத்தில் வெயிலுக்கு 374 பேர் உயிரிழந்து இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் 67 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெப்ப தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.