2024 டி20 உலக கோப்பை இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் பார்படாஸில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு மோதுகிறது. இந்திய அணி கோப்பையை கைப்பற்றும் என இந்திய ரசிகர்கள் நம்பிக்கையோடு இருக்கின்றனர். இதனிடையே இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக் காலம் இன்று நடைபெறும் டி20 இறுதிப் போட்டியுடன் நிறைவு பெறுகிறது.
பயிற்சியாளராக மீண்டும் தொடர அவர் விருப்பம் தெரிவிக்காததால் பிசிசிஐ புதிய பயிற்சியாளரை தேடி வருகிறது. இந்நிலையில், இந்திய அணி உலகக் கோப்பையை வென்று ராகுலின் கரங்களில் ஒப்படைக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.