சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் கோபுரத்தில் இருந்து தவறி விழுந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை கொட்டிவாக்கம் பகுதியை சேர்ந்த பழனி என்பவர் கோயில் கோபுரத்தில் ஏறி பணியாற்றி கொண்டிருந்த போது தவறி விழுந்தார். தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் பழனி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது, உயிரிழந்தார். இதையடுத்து, விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள திருவான்மியூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.