டி20 போட்டிகளில் இருந்து கோலி மற்றும் ரோஹித் ஓய்வு பெறுவதற்கு இதுவே சிறந்த தருணம் என முன்னாள் வீரர் கம்பீர் தெரிவித்துள்ளார். இருவரும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார்கள் என்ற அவர், எதிர்காலத்தில் இந்திய அணி பெறப்போகும் வெற்றிகளில் அவர்களின் பங்களிப்பு பெரிய அளவில் இருக்கும் என்றார். முன்னதாக, இந்திய அணி 2024 டி20 உலக கோப்பையை வென்றதை தொடர்ந்து கோலி மற்றும் ரோஹித் சர்வதேச டி20 போட்டிகளில் ஓய்வை அறிவித்தனர்.