கோவை வ.உ.சி வன உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த 5 கட மான்கள் காட்டுக்குள் விடப்பட்டது. பூங்காவில் உள்ள வன உயிரினங்களை வனப் பகுதியில் விடுவிக்க முதன்மை தலைமை வன பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரின காப்பாளர் உத்தரவிட்டதை தொடர்ந்து, கடந்த மே மாதம் 26 புள்ளி மான்களும், ஜூலை 7, 12ம் தேதிகளில் 11 கட மான்களும் விடுவிக்கப்பட்டன. சிறுவாணி மலை அடிவாரம் பில்டர் ஹவுஸ் சராகம் வனப் பகுதியில் விடுவிக்கப்பட்டன.