சசிகலா திறமையான தலைவர் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சசிகலாவின் அரசியல் நகர்வு குறித்த PTI செய்தி ஊடகத்தின் கேள்விக்கு பதிலளித்த அவர், சசிகலாவின் முடிவை வரவேற்பதாகவும், ஆனால், தாமதமான முடிவு எனவும் கூறியுள்ளார். அவரது நோக்கம் நிறைவேறும் என்ற நம்பிக்கை தனக்கு இல்லையெனவும், அதிமுகவின் பல்வேறு பிரிவுத் தலைவர்களை அவர் சமாதானப்படுத்த வேண்டி இருக்குமெனவும் கூறியுள்ளார்.