அரசுக்கு எதிராக பேசுபவர்கள், ஹிட்லர் பாணியில் கைது செய்யப்படுவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, போதை கலாச்சாரம் மூலை முடுக்கெல்லாம் பரவியுள்ளதாக குற்றம் சாட்டிய அவர், இதை தடுக்க அக்கறை காட்டாமல், தங்களை விமர்சிப்பவர்களை கைது செய்வதிலேயே அரசு ஆர்வம் காட்டி வருகிறது என்றார். முன்னதாக, அவதூறு வழக்கில் சாட்டை துரைமுருகன் நேற்று கைதாகி விடுவிக்கப்பட்டார்.