சட்டவிரோத மது விற்பனை குறித்து வீடியோவுடன் மக்கள் தெரிவித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை, சட்ட விரோத மது விற்பனையை காவல்துறையினர் எப்படி அனுமதிக்கின்றனர்?, அலட்சியத்தால் தான் கள்ளக்குறிச்சியில் பலர் இறந்துள்ளனர் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். சட்டவிரோத மது விற்பனை செய்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும் சட்டவிரோத மது விற்பனைக்கு துணை போன காவல் துறையினர் மீது கடும் நடவடிக்கை தேவை என அவர் தெரிவித்துள்ளார் சட்ட விரோத மது விற்பனை குறித்து பொதுமக்கள் புகார் அளிக்கும் நடவடிக்கை இல்லை என வேதனை தெரிவித்த நீதிபதி, கள்ளக்குறிச்சி உயிரிழப்பு விவகாரத்தில் காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்த காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என கேள்வி எழுப்பியது. இதற்கு அரசு தரப்பு, மது விற்போர், துணை போகும் காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பு உறுதி அளித்துள்ளது.
அதேபோல கள்ளக்குறிச்சி சம்பவம் போல் மற்றொரு சம்பவம் நடக்காமல் இருக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.