வெப் தொடரில் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு சினிமாவை விட வெப் தொடர்களில் நடிப்பு திறமையை வெளிப்படுத்த அதிக வாய்ப்புள்ளதாக நடிகை வாணிபோஜன் வெளிப்படையாக கூறியுள்ளார். ராதாமோகன் இயக்கியுள்ள ‘சட்னி சாம்பார்’ தொடரில் நடித்த அனுபவத்தைப் பகிர்ந்த அவர், “ஆங்கிலோ – இந்திய பெண்ணாக நடித்தது புதிய அனுபவத்தை தந்தது. தொடர்ந்து நல்ல கதையம்சம் உள்ள வெப் தொடர்களில் நடிப்பேன். வெப் தொடர்களுக்கு என்றே தனி ரசிகர்கள் கூட்டமிருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.