திரைப்படங்களுக்கு இணையாக வெப் தொடர்கள் புகழ்பெற்று வருவதால், அதில் சினிமா நடிகர்கள் விரும்பி நடிக்க தொடங்கியுள்ளனர். அந்த வரிசையில், பிரபல காமெடி நடிகர் யோகி பாபு, சட்னி-சாம்பார் எனும் வெப் தொடரில் நடித்துள்ளார். இது அவர் நடிக்கும் முதல் வெப் தொடர் ஆகும். இதில் வாணி போஜன், சார்லி, நிதின் சத்யா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இந்தத் தொடரை திரைப்பட இயக்குநர் ராதாமோகன் இயக்கியுள்ளார்.