சபரிமலை ஐயப்பன் கோவில் ஆடி மாத பூஜைக்காக திறக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனர் முன்னிலையில், கருவறையில் திருவிளக்குகளை தலைமை அர்ச்சகர் பி.என்.மகேஷ் நம்பூதி ஏற்றி வைத்தார். இன்று (ஜுலை 16) அதிகாலையில் நெய்யபிஷேகம் செய்யப்பட்டது. மாலையில் படிபூஜை நடைபெறும். தினசரி அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கையை 80,000 ஆக உயர்தப்படும். வரும் 20 ஆம் தேதி இரவு 10 மணிக்கு ஹரிவராசனம் பாடலுடன் கோவில் நடை மூடப்படும்.