மக்களவை சபாநாயகராக 2ஆவது முறை தேர்வாகியுள்ள ஓம் பிர்லாவுக்கு இந்தியா கூட்டணி சார்பில் ராகுல் காந்தி வாழ்த்து கூறியுள்ளார். மக்களவையில் பேசிய அவர், மக்கள் குரலை எதிர்க்கட்சிகள் பிரதிநிதித்துவப்படுத்துவதால், இந்த அவை சிறந்த முறையில் செயல்பட விரும்புவதாகத் தெரிவித்தார். மேலும், சபாநாயகர் தனது பணியை செய்வதற்கு, எதிர்க்கட்சிகள் உதவிகரமாக இருக்கும் எனவும் அவர் உறுதி அளித்தார்.