கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில், சபாநாயகர் அப்பாவு நடுநிலையுடன் செயல்படவில்லை என, இபிஎஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். மிக முக்கியமான விஷயம் என்பதால், இந்த விவகாரத்தை பேரவையில் உடனே விவாதிக்க வலியுறுத்தியதாகக் குறிப்பிட்ட அவர், சபாநாயகர் நாற்காலியில் அமர்ந்துகொண்டு, அப்பாவு அரசியல் பேசுவது நல்லதல்ல என்றார். வேண்டுமானால், பதவியை ராஜினாமா செய்துவிட்டு அப்பாவு அரசியல் பேசலாம் என இபிஎஸ் தெரிவித்தார்.