சப்-இன்ஸ்பெக்டர் முதல் டிஎஸ்பி வரை அனைவரும் கட்டாயம் கைத்துப்பாக்கி வைத்திருக்க வேண்டுமென்று சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டுள்ளார். மக்களிடம் நல்ல பெயர் எடுக்கும் அளவுக்கு போலீசார் பணிபுரிய வேண்டும். பொதுமக்களின் சிறிய புகார் மீதும் கூடுதல் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். அரசியல் அழுத்தங்களுக்கு பணிய வேண்டாமெனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.