சமஸ்கிருதத்தை வளர்க்க மத்திய அரசு நிதி ஒதுக்குவதில் தவறு கிடையாது என்று பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ.100 கோடியும், சமஸ்கிருத வளர்ச்சிக்கு 2,435 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பேசிய நாராயணன், மத்திய அரசின் மீதுள்ள வெறுப்பின் அடிப்படையிலேயே இந்த மொழி அரசியல் செய்யப்படுகிறது என்றார்.