ஜம்மு & காஷ்மீரில் கடந்த 8ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் 5 வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு காஷ்மீர் டைகர்ஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில், தாக்குதலுக்கு முன் தீவிரவாதிகள் உள்ளூர்வாசிகளை உணவு சமைத்து தரும்படி துப்பாக்கி முனையில் மிரட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், உடலில் கேமராக்களை பொருத்திக் கொண்டு, ராணுவத்தினரின் ஆயுதங்களை கைப்பற்ற முயற்சித்தாகவும் கூறப்படுகிறது.