மாற்றுத்திறனாளி மற்றும் ஓபிசி இடஒதுக்கீட்டை முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பாக, சர்ச்சைக்குரிய பயிற்சி ஐஏஎஸ் பூஜா கெட்கர், 23ஆம் தேதிக்குள் முசோரி ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டது. ஆனால் நேற்றுடன் அவகாசம் முடிவடைந்த நிலையில், அவர் மீது டெல்லி காவல் நிலையத்தில் யுபிஎஸ்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பூஜா மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.