சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வருகின்ற ஜூன் 21ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்வார் என்று மத்திய அமைச்சர் ஜிஜேந்திர சிங் அறிவித்துள்ளார். ஸ்ரீ நகரில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பிரதமருடன் சுமார் ஒன்பதாயிரம் பேர் யோகாசனம் செய்வார்கள் என்று கூறப்படுகிறது. ஜம்மு மற்றும் காஷ்மீரின் 20 மாவட்டங்களில் இருந்து சுமார் 50,000 மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.