தமிழ்நாட்டில் இன்று(செப்,.26) விழுப்புரம, தி.மலை, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, கடலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அடுத்த 2 மணி நேரத்திற்கு சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர், கடலூர், ராமநாதபுரத்தில் மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் மாலை இடி மின்னலுடன் கூடிய மழை வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.