ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் மும்பையில் அண்மையில் நடைபெற்றது. இதில் அனைத்து துறை சார்ந்த ஏராளமான பிரபலங்கள் பங்கேற்றனர். இந்தி திரைப்பட நடிகர் சல்மான் கானும் கலந்து கொண்டார். அப்போது அவர் அணிந்திருந்த வாட்ச்சின் மதிப்பு ரூ.23 கோடி மதிப்புடையது எனத் தகவல் வெளியாகியுள்ளது. அந்த வாட்ச் அக்வானாட் லூஸ் ரெயின்போ ஹாட் ஜோய்லரி மாடல் எனக் கூறப்படுகிறது.