யூடிபர் சவுக்கு சங்கர் மீதான வழக்கில் தமிழ்நாடு அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சவுக்கு சங்கரின் தாயார் கமலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? அவரால் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா? அவரை ஏன் இடைக்கால ஜாமினில் விடுவிக்ககூடாது? என தமிழ்நாடு அரசிடம் சரமாரி கேள்விகளை கேட்டுள்ளது. இதையடுத்து, விசாரணை வருகின்ற 18ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.