ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் பகுதியில், 4 வயது குழந்தையிடம் சாக்லேட் வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோட்டை சேர்ந்த சிவக்குமார் (34) என்பவர் சம்பவத்தன்று குழந்தைக்கு சாக்லேட் வாங்கி கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
அப்போது குழந்தையின் அலறல் சத்தம் கேட்டதால் பதறியடித்துச் சென்ற தாய், குழந்தையை மீட்டுள்ளார்! இதுகுறித்து அறிந்த குழந்தையின் பெற்றோர் போலீசில் புகார் அளித்ததையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.