துரைமுருகனை, நீதிமன்றக் காவலில் அனுப்ப திருச்சி நீதிமன்றம் மறுத்துள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் பிரசாரம் செய்த சாட்டை துரைமுருகன், கருணாநிதி குறித்து அவதூறாகப் பேசியதாக கைது செய்யப்பட்டார். சாட்டை துரைமுருகன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், அவருக்கு 15 நாள்கள் நீதிமன்றக் காவல் விதிக்க மறுப்பு தெரிவித்து உத்தரவிட்ட நிலையில் அவர் விடுவிக்கப்பட்டார்.
முன்னதாக நாம் தமிழர் நிர்வாகியும், பிரபல யூடியூபருமான சாட்டை துரைமுருகனை திருச்சி போலீசார் குற்றாலத்தில் வைத்து கைது செய்தனர். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக திமுகவினர் புகார் அளித்திருந்தனர். அந்த புகாரின் மீது விசாரணை நடத்திய திருச்சி சைபர் கிரைம் போலீசார், குற்றாலத்திற்கு சென்ற துரைமுருகனை தேடிச் சென்று கைது செய்தனர்.