தொடர்ந்து 2 நாட்கள் தாமதமாக வரும் ஊழியர்களின் சாதாரண விடுப்பிலிருந்து அரைநாள் பிடித்தம் செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு ஊழியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். சில நாட்களில் பணி நேரத்தை கடந்து வேலை செய்வதாகவும் விடுமுறை நாட்களில் வீட்டிலிருந்தும் பணிபுரிந்து வருவதாக கூறியுள்ள ஊழியர்கள் இந்த அறிவிப்பை அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.