நாட்டில் சமூக நீதியை நிலைநாட்ட சாதிவாரி கணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும் என முதல்வர் முக ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். திமுகவின் சட்ட போராட்டத்தால் கடந்த 3 ஆண்டுகளில் ஓபிசி மாணவர்களுக்கு 15,066 மருத்துவ இடங்கள் கிடைத்துள்ளதாக கூறிய அவர், இந்தியாவில் பின்தங்கிய சமூகத்தின் விகிதாச்சாரத்தை தெரிந்துகொள்ள சாதிவாரி கணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும் என மத்திய அரசை கேட்டுக்கொண்டார்.