மது தொடர்பான அனைத்து தீமைகளுக்கும் திமுகதான் காரணம் என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். சாராயத்தை அறியாமல் இருந்த ஒரு தலைமுறைக்கு 1972 ஆம் ஆண்டு அதனை அறிமுகம் செய்துவைத்ததே திமுகவும் அதன் தலைவர் கருணாநிதியும் தான் என விமர்சித்த அவர், அதற்கு பரிகாரமாக முழு மதுவிலக்கை முதல்வர் ஸ்டாலினின் அரசு அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.