கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி இதுவரை 39 பேர் உயிரிழந்து உள்ள நிலையில் திமுக அரசையும் முதல்வர் ஸ்டாலினையும் கண்டித்து பல குரல்கள் எழுந்துள்ளது. இந்த நிலையில் கள்ளச்சாராயம் விவகாரத்தில் வியாபாரிகள் மற்றும் திமுகவினர் இடையே தொடர்பு இருப்பதாக அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார். கல்வராயன் மலையில் சாராயம் காய்ச்சி பல பகுதிகளுக்கு அனுப்பப்படுவதாக குறிப்பிட்டுள்ள அவர், வியாபாரிகளை காவல்துறை கைது செய்தாலும் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் எம் எல் ஏ வசந்தம் கார்த்திகேயனின் ஆதரவாளர்கள் அவர்களை விடுதலை செய்ய வைப்பதாக விமர்சித்துள்ளார்.