பைக்கில் பயணித்தபடி ஃபோனில் ரீல்ஸ் உருவாக்கிய போது, விபத்தில் சிக்கியவர்களின் வீடியோவை உ.பி. போலீசார் சமூக
வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். மேலும், சாலையில் செல்லும் போது, ஓட்டுநர்கள் செல்ஃபோன் பயன்படுத்துவதையோ அல்லது சாலையில் செல்லும் போது வீடியோக்களை பதிவு செய்வதையோ தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. மக்களிடம் அதிகரித்து வரும் ரீல்ஸ் மோகம், விபரீத முடிவுகளை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.