சென்னை திருவல்லிக்கேணியில் அருகே சாலையோரம் நின்றிருந்த 17 வயது சிறுவனை அங்கு சுற்றித் திரிந்த மாடு முட்டியது. இதில் சிறுவனின் இடது கையில் காயம் ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். மாடு முட்டிய சம்பவம் குறித்து ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சாலையில் சுற்றித்திரியும் மாடுகளைப் பிடிக்கும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.