உசிலம்பட்டியை சேர்ந்த செல்வேந்திரன் (37) என்பவர் கடந்த சனிக்கிழமை நடந்த விபத்து ஒன்றில் சிக்கி மூளை சாவு அடைந்தார். அவரது உறுப்புகளை தானம் செய்ய உறவினர்கள் சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து இருதயம், சிறுநீரகங்கள் மற்றும் கண் கருவிழிகள் ஆகியவை தேவைப்படுவோருக்கு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதன் மூலம் நான்கு பேரின் வாழ்வில் ஒளி ஏற்றுகிறார் செல்வேந்திரன். இவருடைய இந்த செயல் பலரையும் உறைய வைத்துள்ளது.