தென் மாவட்டங்களில் முக்கிய தொழிலாக விளங்கும் தீப்பெட்டி உற்பத்தி தொழிலை கடுமையாக பாதிக்கும் சிகரெட் லைட்டர்கள் விற்பனைக்கு தடை விதிக்க கோரி முதலமைச்சருக்கு சபாநாயகர் அப்பாவு கடிதம் எழுதியுள்ளார். தற்போது லைட்டர்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்படிருந்தாலும், வடநாட்டு நிறுவனங்கள் மூலப்பொருட்களை இறக்குமதி செய்து, லைட்டர்களை தயாரித்து ரூ.8 முதல் ரூ.10க்கு விற்பனை செய்கிறார்கள். இதனால், தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.