கள்ளக்குறிச்சியில் விசாச்சாராயம் அருந்தி மருத்துவமனை சிகிச்சையில் இருந்து தப்பி சென்றவர் உயிரிழந்து உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சற்று உடல் நலம் தேறியதும் மருத்துவமனையில் இருந்து யாரிடமும் சொல்லாமல் வீட்டிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. மேலும் இன்று காலை கடும் வயிற்று வலி ஏற்பட்டு சங்கராபுரம் மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். இதனைத் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.