ஐதராபாத்தில் தடுக்கி விழுந்தால் பிரியாணி கடை என ஏராளமான பிரியாணி கடைகள் உள்ளது. சமீபத்தில் மணிகொண்டாவை சேர்ந்த ஒருவர் ஸ்விக்கியில் சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். அப்போது பிரியாணியில் சிக்கன் துண்டுகளுடன் நன்கு சமைத்து பொரித்த பிளாஸ்டிக் கவர் கிடந்துள்ளது. இதைக் கண்ட வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்தார்.