தமிழ் சினிமாவில் வெற்றிக்கொடிக்கட்டு, சந்திரமுகி மற்றும் திருட்டுப் பயலே உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகை மாளவிகா. இவர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு தற்போது முயற்சி சிவாவுடன் படம் ஒன்றில் நடித்து வருகின்றார். திருமணத்திற்கு பிறகு கர்ப்பமாக இருந்ததால் படங்களில் நடிக்க வாங்கிய முன் பணத்தை திரும்ப கொடுத்ததாகவும் அதனால் தொடர்ந்து நடிக்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த இடைவெளி மிகவும் நீண்டு விட்டதாக கூறியுள்ளார்.