சார் பட்டா பரம்பரை திரைப்படம் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்தி கொண்டவர் தான் நடிகை துஷாரா விஜயன். இவர் நடித்துள்ள வேட்டையன் மற்றும் ராயன் உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. இந்த நிலையில் ஒன்பது ஆண்டுகளில் சினிமாவை விட்டு விலகப் போவதாக துஷாரா விஜயன் அறிவித்துள்ளார். திறமையான நடிகையான இவரின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.