ஜப்பானில் பள்ளி மாணவர்கள் 14 பேர் உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிட்டு, உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சிப்ஸ் இந்தியாவில் உற்பத்தியாகும் புட் ஜோலோகியா என்ற காரம் மிகுந்த சிவப்பு மிளகாய் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. 18 வயதுக்குட்பட்டவர்கள் இதை சாப்பிடக்கூடாது என குறிப்பிட்டிருந்தும் மாணவர்கள் அதனை சாப்பிட்டுள்ளனர்.