தொலைதொடர்பு நிறுவனங்கள் இனி செல்போன் சிம் கார்டுகளுக்கு தனி கட்டணம் வசூலிக்க உள்ளதாக வெளியான தகவலை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) மறுத்துள்ளது. அதன் அறிக்கையில் செல்போன் சிம் கார்டுகள் மற்றும் பயன்படுத்தப்படாத எண்கள் இரண்டிற்கும் அபராதமோ அல்லது தனி கட்டணமோ விதிக்க திட்டமிடப்படவில்லை. இத்தகைய தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை. இந்த யூகங்கள் தொடர்பாக மக்கள் கவனம் செலுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.