தமிழில் சிறந்த நூல்களைப் படைத்த நூலாசிரியர்கள் பதிப்பகதாருக்கான பரிசு தொகையை தமிழக அரசு உயர்த்தி உள்ளது. நூலாசிரியருக்கான பரிசுத்தொகை 30 ஆயிரம் ரூபாயிலிருந்து 50,000 ரூபாயாகவும், பதிப்பாளருக்கான பரிசுத்தொகை பத்தாயிரம் ரூபாயில் இருந்து 25 ஆயிரம் ரூபாய் ஆகும் உயர்த்தப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கு தேர்வு செய்யப்படும் நூல்களுக்கு இந்த பரிசு தொகை வழங்கப்படும் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.