தமிழ் திரையுலகில் 32 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் அஜித்குமாரின் திரை பயணத்தை கொண்டாடும் வகையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் “குட், பேட், அக்லி” படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியாகி உள்ளது. இன்று காலை விடாமுயற்சி படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது இப்படத்தின் போஸ்டர் ரசிகர்களை இரட்டிப்பு மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இப்படம், 2021 ஆம் ஆண்டு பொங்கல் விருந்தாக திரைக்கு வர உள்ளது.