சிறிய பட்ஜெட் படங்களை விற்பது மிகப்பெரிய சவாலாக மாறி இருப்பதாக இயக்குநர் பா.ரஞ்சித் வேதனையுடன் கூறியுள்ளார். ‘வாழை’ பட நிகழ்ச்சியில் பேசிய அவர், “ஓடிடி தளங்கள் வந்த தொடக்கத்தில் சிறிய படங்களுக்கு மரியாதை இருந்தது. சிறிய படங்களை போட்டிப் போட்டு வாங்கினார்கள். ஆனால், இப்போது நிலைமை அப்படி இல்லை. நல்ல கதை இருந்தாலும் தூக்கி போடும் நிலைக்கு போய் விட்டார்கள். இந்நிலை மாற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.