நாடு முழுவதும் புதிதாக மூன்று கிரிமினல் சட்டங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்த சட்டங்களின்படி சிறுமியரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யும் நபர்களுக்கு இனி தூக்கு தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும். பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்களின் வாக்குமூலம் அவரது உறவினர் முன்னிலையில் பெண் போலீசாரால் பதிவு செய்யப்பட வேண்டும். திருமண மோசடிக்கு எதிராக சட்ட பிரிவுகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.