அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 6-ம் வகுப்பு படித்துவரும் 13 வயது சிறுமி, சற்று மனநலம் பாதிக்கப்பட்டவராவார். இந்நிலையில் கடந்த ஜூலை 21-ந் தேதி விடுமுறை என்பதால் சிறுமி வீட்டில் இருந்துள்ளார். அப்போது யாரும் இல்லாத நேரம் பார்த்து ராஜேந்திரன் (65), பன்னீர்செல்வம் (76), சின்னத்தம்பி (70) ஆகியோர் சிறுமியின் வீட்டிற்குள் புகுந்து அவரை மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில் 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.