உத்தராகண்டில், சில நாள்களுக்கு முன்பு 19 வயது சிறுவன் தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்ற போது, அருவியில் குளித்துள்ளார். அதை தொடர்ந்து, சில நாள்களாக சிறுவனின் மூக்கில் ஒருவித அசௌகரியம் ஏற்பட்டுள்ளது. பிறகு, சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது மூக்கில் இருந்து 14 நாள்களுக்கு பின் அட்டைப்புழு வெற்றிகரமாக அகற்றப்பட்டது. சிறுவனின் ரத்தத்தை உறிஞ்சி அட்டை உயிர் வாழ்ந்து வந்துள்ளது.