முறையான அனுமதி பெற்ற பின்னரே பேனர் வைக்கப்படும் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய திமுகவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரத்தில் திமுக சார்பில் வைக்கப்பட்ட பேனரில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த வழக்கை நீதிமன்றம் விசாரித்தது. அப்போது இது போன்ற விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்க அனைத்து கட்சிகளும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் முதலில் திமுக தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.