விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சீரியல் பல்ப்பை பிடித்து விளையாடிய சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆதனூரை சேர்ந்த வினோத்குமார் மற்றும் சுந்தரி தம்பதி, உறவினர் வீட்டில் நடக்கும் சுப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றுள்ளனர். அங்கு அலங்காரத்திற்காக தொங்கவிடப்பட்டிருந்த சீரியல் பல்புகளை பிடித்து 4 வயது சிறுவன் மோஷித் விளையாடியபோது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு உள்ளார். இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசித்தித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.