தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பிறந்தநாளையொட்டி, மாநிலம் முழுவதும் பல பகுதிகளில் அவரது தொண்டர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். சில இடங்களில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து பேனர்கள் வைக்கப்பட்டன. அந்த வகையில், கள்ளக்குறிச்சியில் வைக்கப்பட்ட பேனர், காற்றின் வேகத்தால், 10 வயது சிறுவன் மீது சாய்ந்து விபத்திற்குள்ளானது. நல்வாய்ப்பாக சிறுவன் காயங்கள் இன்றி உயிர் தப்பினார்.