மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌஹான் புத்னி சட்டப்பேரவைத் தொகுதியில் வென்று எம்எல்ஏ.வாக இருந்தார். அதே நேரத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் விதிஷா தொகுதியில் வென்றதால், மோடி தலைமையிலான அமைச்சரவையில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சராக பதவியேற்றார். இதையடுத்து புத்னி எம்எல்ஏ பதவியை அவர் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.